2 நாள் முடிவில் தனுஷின் “நானே வருவேன்” திரைப்படம் அள்ளிய மொத்த வசூல் இவ்வளவுதானா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ் இவர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதால் அவரது படங்கள் பெரும்பாலும் வெற்றியை ருசிக்கின்றன தனுஷ் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக 100 கோடிக்கு மேல் அள்ளி சாதனை படைத்தது இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதில் முதலாவதாக இவர் தனது அண்ணன் செல்வாராகவனுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து நடித்த திரைப்படம் நானே வருவேன். இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து இந்துஜா ரவிச்சந்திரன், பிரபு, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.  நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீசானது.

படம் எதிர்பார்த்ததைவிட சூப்பராக இருந்ததால் ரசிகர்கள் தற்பொழுது நானே வருவேன் படத்தை கொண்டாடி வருகின்றனர் இந்த படத்தில் பிளஸ் என்னவென்றால் தனுஷ் வில்லனாக நடித்த கதாபாத்திரம் பயங்கரமாக இருப்பது தான்.. அந்த கதாபாத்திரத்தை தான் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடியும் வருகின்றனர்.

தொடர்ந்து படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது முதல் நாளில் எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் அள்ளிய நிலையில் நேற்று இரண்டாவது நாள் முடிவில் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்கையில் நானே வருவேன் திரைப்படம் இரண்டு நாள் முடிவில் உலகம் முழுவதும் 21 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பெரிய அளவில் இந்த செய்தி வைரல் ஆகி வருகிறது. வருகின்ற நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் வருகின்ற நாட்களில் நானே வருவேன் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

 

Leave a Comment