55 வயதில் டீன் ஏஜ் பெண்ணுடன் நடனத்தில் போட்டி போடும் நடிகை நதியா..! இவங்களுக்கு வயசே ஆகாதா..!

80 மட்டும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நதியா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் நமது நடிகை முதன்முதலாக பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அந்த வகையில் இவர் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ஏகப்பட்ட வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுவிட்டார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகராக வலம் வரும் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சிவகுமார், பிரபு போன்ற பல்வேறு நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தது மட்டும் இல்லாமல் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் ஆழமான வெற்றியை பெற்று தந்தது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் பின்னர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நமது நதியா நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் முகம் காட்டினார்.

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் சில திரைபடத்தில் முகம் காட்டி வருவது மட்டுமில்லாமல் தற்பொழுது நமது நடிகை 55 வயது ஆகிவிட்டது இந்நிலையில் அவருக்கு இளமை கொஞ்சம் கூட குறையாமல் இருந்து வருகிறார் ஆனால் அவருடன் நடித்த நடிகைகள் அனைவருமே தற்பொழுது வயதான தோற்றத்திற்கு மாறிவிட்டார்கள் ஆனால் அவர் மட்டும் இன்னும் இளமையாக இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகை நதியா அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் டீனேஜ் பெண்ணுடன் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது மேலும் 55 வயதில் இவர் ஆடிய நடனத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

Leave a Comment