அந்தக் காலத்தில் கவுண்டமணி,செந்திலுக்கே டஃப் கொடுத்த காமெடி நடிகர் தன்னிடம் இருக்கும் கெட்ட பழக்கத்தால் சினிமாவை விட்டு விலகும் நிலைமை.!

தமிழ் சினிமாவில் தோன்றிய பல காமெடி நடிகர்களும் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள் குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் 80 மற்றும் 90 காலகட்டங்களில் நடித்த பல காமெடி நடிகர்களும் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் தட்டுத்தடுமாறி வருகிறார்கள். அந்த காலகட்டங்களில் எந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனாலும் அந்த திரைப்படத்தில் கண்டிப்பாக செந்தில்,கவுண்டமணி ஆகிய இருவர்களும் இருப்பார்கள்.

இவர்கள் செய்யும் காமெடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டதால் இவர்கள் அந்த காலத்தில் நடிக்காத திரைப்படங்களே இல்லை என்றுதான் கூற வேண்டும் அதேபோல் இவர்களுக்கு சமமாக அந்த காலகட்டங்களில் பல திரைப் படங்களை கைப்பற்றி நடித்து வந்த நடிகர்களில் ஒருவர் தான் ஜனகராஜ் இவர் ரஜினி,கமல் போன்ற நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைந்து நடித்து அப்போது மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வந்த காமெடி நடிகர்களில் இவரும் ஒருவராக திகழ்ந்து வந்தார்.

மேலும் இவர் யாரிடம் பழகினாலும் அவர்களிடம் உடனே ஒரு மனஸ்தாபம் ஏற்படும் அளவிற்கு நடந்து கொள்வாராம் அதனால் தான் இவருக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் போய்விட்டது என பல பிரபலங்களும் கூறி வருகிறார்கள்.கிட்டத்தட்ட இவரது சினிமா பயணம் முடிவடையும் நிலைமையில் இருந்த போது இவருக்கு மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து.

மீண்டும் மக்கள் மத்தியில் ரீ என்ட்ரி கொடுத்து விட்டார் தற்பொழுது மக்கள் மீண்டும் ஜனகராஜ் பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என கூறி வருகிறார்களாம்.ஆனால் இவர் மீண்டும் நடிக்க வந்தால் தற்போதும் கூட இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தர இருக்கிறார்கள்.

janagaraj

எனவும் தகவல் வைரலாகி வருகிறது அதற்கு ஏற்பது போல் இவரும் கூடிய சீக்கிரம் ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகுவார் என ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆனால் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மக்கள் இன்னும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமே இல்லை.

Leave a Comment