சென்னை கிரிக்கெட் மைதானத்தில் விஜய் ரசிகர்களை ஆட்டம் போடவைத்த அஸ்வின்.! இணையதளத்தில் பட்டைய கிளப்பும் வீடியோ.

சினிமா திரை உலகில் திறமை உள்ள நடிகர் மற்றும் இயக்குனர் ஒன்று சேர்ந்தால் அந்த திரைப்படம் மாபெரும் ஹிட்டடிக்கும் என்பது காலம் காலமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் முதன்முதலாக இணைந்து  உருவான திரைப்படம் மாஸ்டர்.

கடந்த பொங்கல் அன்று வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படத்தின் போது 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட இருந்தாலும் தளபதி விஜய் படம் வழக்கம்போல கோடிகளில் வசூல் வேட்டை நடத்தியது.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருந்தாலும் மறுபக்கம் OTT தளங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று சிறப்பாக கல்லா கட்டுகிறது.

படம் ஒரு மாதத்திற்கு மேல் வெளியாகியிருந்தாலும் ரசிகர்களை இன்றும் கொண்டாட வைத்து வருகிறது.

இந்த திரைப்படத்தில் ஆக்சன், பாடல்கள் பலம் சேர்ப்பதால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து  இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் “வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார்” அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment