அசுரன் எங்கிற தலைப்புக்கு மிகப்பொருத்தமான நடிகர்.! பிரபல நடிகர் ட்வீட்

0

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அசுரன்’. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், “நம்மை வாயடைத்துப் போகவைக்கும் படங்களில் ஒன்று ‘அசுரன்’. பழிவாங்கும் கதை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இந்தப் படம் எப்படி முடிகிறது என்பதுதான் இதை வித்தியாசப்படுத்துகிறது.

ஒரு நடிகர் எப்படி தனது வயது, உடல் ரீதியான வரம்புகள் எல்லாவற்றையும் மீறி ஒவ்வொரு முறையும் உருமாற முடிகிறது என்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன்” என்றும், “‘அசுரன்’ தலைப்புக்கு மிகப் பொருத்தமான நடிகர் தனுஷ்” என்றும் பதிவு செய்துள்ளார்.

இதோ அவரின் பதிவு உங்களுக்காக