அசுரன் படத்தின் இரண்டாவது மாஸ் லுக் போஸ்டரை வெளியிட தனுஷ்.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

0
asuran
asuran

நடிகர் தனுஷ் வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைத்திருக்கும் திரைப்படம் அசுரன், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தான் துவங்கியது, இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

இந்த திரைப்படம் கலைப்புலி தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகி வருகிறது. அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வருகிறார், மேலும் பொல்லாதவன், மயக்கமென்ன, ஆடுகளம், படத்தை தொடர்ந்து அசுரன் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

asuran
asuran

இந்த திரைப்படம் வெக்கை என்ற நாவலை அடிப்படையாக வைத்து கதை உருவாகியுள்ளது படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார், மேலும் பசுபதி  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது.

asuran
asuran

இந்த நிலையில் படத்தின் இரண்டாவது லுக்கை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் விரைவில் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள், மேலும் அக்டோபர் 4ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.