காலங்காத்தாலேயே ராசி பலன் சொல்லும் இந்த தொகுப்பாளினி நினைவிருக்கிறதா.? புகைப்படத்தை பார்த்து மெர்சலான ரசிகர்கள்.

ஒரு காலகட்டத்தில் காலையில் எழுந்தவுடன் ராசிபலன் கேட்கும் பழக்கம் பல ரசிகர்களிடையே இருந்து வந்தது, அதேபோல் பலரும் இந்த ராசிபலன் பார்ப்பதற்கு அடிமையானார்கள் அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் 18 வருடங்களாக ஜோதிடப் பலனை தொகுத்து வழங்கியவர் vj விஷால்.

பல ரசிகர்கள் காலையில் எழுந்தவுடன் இவரின் குரலை கேட்டு விட்டுதான் அடுத்த வேலையை ஆரம்பிப்பார்கள் அந்த அளவு இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமானது, சன் தொலைக்காட்சியில் பார்ட் டைமாக தான் வேலை செய்துவந்தார் இவரின் முழு நேர வேலை ஐடி நிறுவனத்தில்தான்.

இந்த நிலையில் தன்னுடைய ஐடி வேலை அதிகமாக இருப்பதால் சன் தொலைக்காட்சியில் ஜோதிடம் நிகழ்ச்சி தொடர முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார், ஐடி வேலையில் அதிக சம்பளம் கிடைக்கிறது அதேபோல் சன் தொலைக்காட்சியில் ஜோதிடம் கூறுவதால் அதிகப் புகழ் கிடைத்தது.

அதேபோல் சன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்குவதை நிறுத்திய பிறகும் எங்கு சென்றாலும் ரசிகர்கள் என்னை கண்டுபிடித்து செல்பி எடுத்துக் கொள்கிறார்கள் என அவர் கூறியுள்ளார், இந்தப் புகழை வைத்து தான் தற்பொழுது ஒரு யூடியூப் சேனலை தொடங்கியுள்ளதாகவும் இனி தினமும் அதில் நீங்கள் ராசிபலன் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த சேனலுக்கு பெயர் Rasipalan by vishal என வைத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் என்னை தினமும் மிஸ் பண்ணாமல் பாருங்கள் என ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

vj vishal-tamil360newz
vj vishal-tamil360newz

Leave a Comment