பில்லா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது “அசின்” தான்.. அவர் எடுத்துக்கொண்ட போட்டோ சூட்டை நீங்களே பாருங்கள்

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொல்லிப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் கடந்த சில வருடங்களாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் கடைசியாக நடித்த “துணிவு” திரைப்படம் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 230 கோடிக்கு மேல அள்ளி அசத்தியது.

அதனைத் தொடர்ந்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க அஜித் ரெடியாக இருக்கிறார். லைக்கா நிறுவனம் மிகப் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறது மகிழ் திருமேனி  இந்த படத்தை இயக்க உள்ளார்.  இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.. ஆனால் வெகு விரைவில் வரும் என சொல்லப்படுகிறது.

இது இப்படி இருக்க.. அஜித் லண்டனுக்கு சென்று தற்போது தான் சென்னை திரும்பி உள்ளார் அதன் புகைப்படங்கள் பெரிதாக பேசப்பட்டது . புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க தான் வந்திருக்கிறார் எனக் கூறி கமெண்ட் அடிக்கவும் ஆரம்பித்தனர்.  இந்த நிலையில் அஜித் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அஜித் கேரியரில் மிகப்பெரிய ஒரு திருப்பு முனை படம் என்றால் அது பில்லா தான்.

இது ஒரு ரீமேக் திரைப்படம் தான் ஏற்கனவே ரஜினி பில்லா என்ற தலைப்பில் நடித்திருந்தார் அந்த படத்தின் கதையில் சிறு மாற்றங்கள் செய்து அஜித் நடித்திருந்தார் இந்த படம் வெளிவந்த பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது படத்தில் அஜித்துடன் இணைந்து நயந்தாரா, நமீதா, ரகுமான் என பல திரை பட்டாளங்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து அசத்தினார்.

குறிப்பாக நடிகை நயன்தாரா படத்தில் கிளாமராக நடித்து அசத்தினார். ஆனால் உண்மையில் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா கிடையாது. நடிகை அசின் தான். இந்தப் படத்தில் நடிக்க முதலில் அசின் போட்டோ சூட் நடத்தினார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

asin
asin
asin
asin

Leave a Comment