விஜய் டிவியிலிருந்து சன் டிவிக்கு அறிமுகமாக உள்ள பிரபல நடிகர்.! எந்த நடிகர் தெரியுமா.?

தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் சமீப காலங்களாக ஏராளமான தொழில்கள் முடங்கி உள்ளது.  அந்த வகையில் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சீரியல்களின் படப்பிடிப்புகள் மட்டும் பல கட்டுப்பாடுகளுடன் அந்த தொலைக்காட்சிகளின் நிறுவனத்திற்கு உள்ளேயே செட் போட்டு சில நடிகர், நடிகைகள் மட்டும் வைத்து சீரியல்களை இயக்கி வருகிறார்கள்.

எனவே சீரியலில் ரசிகர்கலின் ஃபேவரைட் நடிகர், நடிகைகள் பலர் சீரியலில் இருந்து வெளியேறி உள்ளதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் இருந்தது தான் பல நடிகர்,நடிகைகள் வெளியேறி உள்ளார்கள்.

சமீபத்தில் பூவே உனக்காக ஹீரோ இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இவரை தொடர்ந்து மகராசி சீரியல் ஹீரோயின் விலகியுள்ளார் இதே போல் பலரும் தொடர்ந்து சீரியலை விட்டு விலகுவதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது பூவே உனக்காக சீரியலில் புதுமுக நடிகர் ஒருவர் அறிமுகமாக உள்ளதாக கூறி உள்ளார்கள். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் இவரும் ரசிகர்களின் பேவரைட் நடிகர் ஆவார்.

asim
asim

விஜய் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளிலும் பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகர் அசீம். இவர் தற்பொழுது பூவே உனக்காக சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.  இவர் நடித்து வரும் காட்சிகள் இரண்டு நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment