அஸ்வின் பவுலிங்கை ‘சென்னை-28 மிர்ச்சி சிவா பவுலிங்’ என கிண்டலடிக்கும் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.!

0
ashwin
ashwin

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பந்தை ஒளித்து வைத்து வித்தியாசமான வீசிய வீடியோ இணையதளத்தில் விமர்சனங்களை பெற்று வருகிறது.

டிஎன்பிஎல் 4வது சீசன் கிரிக்கெட் தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கி போட்டி நடைபெற்று வருகிறது இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன, அதேபோல் ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டிகளில் மற்றொரு அணியுடன் மோதிக்கொள்ளும் கடைசியில் புள்ளிகள் அடிப்படையில் நான்கு அணிகள் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு இடம்பெறும்.

இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தலைமையில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது, முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது, அடுத்ததாக களமிறங்கிய மதுரை அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அதனால் கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் பந்தை ஒளித்து வைத்து குறைந்த வேகத்தில் வீசினார் அந்த பந்தை அடிக்க முயன்ற பேட்ஸ்மேன் விக்கெட் இழுந்தார் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அஸ்வின் இது போல் பந்து வீசுவது ஒன்றும் புதிதல்ல ஆனால் ஐபிஎல் போட்டியின்போது இதுபோல் பந்துவீசினார் அது அனைத்தும் விதிக்கு உட்பட்டது, ஆனால் இப்பொழுது வீசிய பந்து கிரிக்கெட் விதியை மீறுவது போலிருக்கிறது, இதற்கு முன் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இதுபோல் பந்துவீச்சியுள்ளார் அஸ்வின், மேலும் அஸ்வினின் இந்த வீடியோவை பார்த்து ‘போங்கு பால்’ ‘சென்னை-28 மிர்ச்சி சிவா பவுலிங்’ என கிண்டல் செய்து வருகிறார்கள்.