ஹாட்ரிக் சாதனை படைத்த அஷ்டன் அகர்.! தென்னாப்பிரிக்காவை அடிச்சி தூக்கிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி மூன்று T20 போட்டிகளிலும் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவதற்காக தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 196 ரன்களை எடுத்தது.ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் சுமித் 32 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார்.

அவரைத் தொடர்ந்து கேப்டன் டேவிட் பின்ச் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 பந்துகளில் 41 ரன்களை குவித்தார் இவர்களை தவிர மற்ற வீரர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 196 ரன்களை குவித்தது.இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்தியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் குண்டன் டி காக்கும் மற்றும் வாண்டெர் டசனும் களமிறங்கினார்.இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் இதனை தொடர்ந்து இவர்கள் யாரும் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ஆஸ்திரேலிய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முக்கிய காரணமான அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஷ்டன் அகர் தனது சிறந்த பந்துவீச்சை வீசி ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார் அதுமட்டுமில்லாமல் ஹாட்ரிக் விக்கெட்டையும் கைப்பற்றினர்.

agar
agar

ஆஸ்திரேலிய அணியின் சார்பில் எட்டாவது ஓவரை வீசிய சுழற்பந்துவீச்சாளர் அஷ்டன் அகர் நான்காவது பந்தில் ஃபேப் டு பிளேசிஸ்ஸை ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த பந்தில் அடுத்த பந்தில் ஃபெலுக்வாயோவையும் அதற்கடுத்த பந்தில் ஸ்டெய்னையும் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி 8வது ஓவரிலேயே வெற்றிக்கு வித்திட்டார்.

Leave a Comment