அசோக் செல்வனுக்கு திருமணம் முடிந்தது இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்.!

Ashok selvan Marriage : நடிகர் அசோக்செல்வன் தமிழ் சினிமாவில் 2013 ஆம் ஆண்டு சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து பிசா 2, தெகிடி ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், சில சமயங்களில், ஓ மை கடவுளே என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது போர் தொழில் திரைப்படம் தான். போர் தமிழ் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் தான் அசோக் செல்வன் நடித்திருந்தார்.

அசோக் செல்வன் தற்பொழுது நடிகர் கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்துள்ளார் கீர்த்தி பாண்டியன் அருண்பாண்டியனின் மகள் தான். தமிழ் சினிமாவில் தும்பா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன் அதனைத் தொடர்ந்து அன்பிற்கினியால் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

ashok selvan marriage
ashok selvan marriage

அது மட்டும் இல்லாமல் ரஞ்சித் தயாரிப்பில் ப்ளூ ஸ்டார் என்கின்ற படத்திலும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள் இவர்களின் காதலுக்கு குடும்பத்தாரிடையே கிரீன் சிக்னல் கிடைத்தது இந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்களின் திருமணம் பொதுவெளியில் மிகவும் சிம்பிளாக நடைபெற்றுள்ளது.

ashok selvan marriage
ashok selvan marriage

இவர்களின் திருமணம் அருண் பாண்டியனின் பண்ணை வீட்டில் நடைபெற்றுள்ளது திருநெல்வேலியில் உள்ள இட்டேரி என்ற கிராமத்தில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது இவர்களின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

ashok selvan marriage
ashok selvan marriage
ashok selvan marriage
ashok selvan marriage