இவர் ஒருத்தர் தான் தோனியை மதிச்சுருக்காரு.! ஆனா இந்த மர்மம் தான் புரியவே இல்லை

0
MSDhoni
MSDhoni

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி வெற்றிகரமாக முடிந்து விட்டது, இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதி வரை சென்று தோற்றது, கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி மற்றும் நியூசிலாந்து அணி மோதிக்கொண்டன இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்டது.

உலக கோப்பை போட்டி முடிவடைந்த நிலையில், சமீபத்தில் icc சிறப்பான 11 வீரர்கள் பட்டியலை வெளியிட்டது, அதேபோல் உலக கோப்பையில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின், கவாஸ்கர் ஆகியோர்கள் தங்களுக்கான அணியை தேர்வு செய்தார்கள், அதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாஸ்ட் பவுலர் ஆஷிஷ் நெஹ்ரா தேர்வு செய்துள்ளார், அவர் தேர்வு செய்த வீரர்கள், தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் டேவிட் வார்னர்னை தேர்வு செய்துள்ளார், அதேபோல் இந்த உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மா 648 ரன்கள் எடுத்து முதலிடத்திலும், ஆறு 647 ரன்கள் எடுத்து வார்னர் இரண்டாவது இடத்திலும் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இருக்கிறார்கள்.

அதேபோல் மூன்றாம் வரிசையில் விராட் கோலியும், நான்காம் வரிசையில் கேன் வில்லியம்சன் அவர்களை தேர்வு செய்துள்ளார், ஆஷிஷ் நெஹ்ரா அதுமட்டுமில்லாமல் ஆல்-ரவுண்டராக ஸ்டோக்ஸ் மற்றும் ஷஹிப் மேலும் யாருமே விக்கெட் கீப்பராக தோனியை  தேர்வு செய்யாத நிலையில் ஆஷிஷ் நெஹ்ரா தோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சாஹலை ஏன் எடுத்து வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை அதேபோல் ஃபாஸ்ட் பவுலர் பும்ரா, ஆர்ச்சர், ஸ்டோக்  ஆகியவர்களை தேர்வு செய்துள்ளார், அதேபோல் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவரும் தோனி மற்றும் கோலியை தேர்வு செய்யவில்லை ஆனால் நெஹ்ரா  இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஒருவேளை இந்தியாவில் சீனியர் வீரர்களாக இருக்கிறார்கள் அவர்களின் மரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது என நினைகிறாரா, மேலும் சாஹலை ஏன் தேர்வு செய்தார் என்று புரியாத மர்மமாகவே இருக்கிறது.