சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியைத் தேடிக் கொண்டு ஓடி வரும் விஜய் சேதுபதி தற்போது ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் ரோல்களில் பின்னி பெடல் எடுப்பதோடு அதில் இவரது நடிப்பு வேற அளவில் இருப்பதால் இவருக்கான வரவேற்பு தற்போது அனைத்து மொழிகளிலும் நன்றாக இருக்கிறது.
இதை புரிந்து கொண்ட விஜய் சேதுபதியும் தற்போது தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி சிறப்பாக வலம் வர முடிவு செய்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள விக்ரமும் திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளதாக சமீபத்திய செய்திகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர் இதற்கான அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியே வராமல் இருக்கிறது.
ஆனால் இதற்குள் அவர் தெலுங்கு திரைப்படங்களில் வில்லனாகவும் கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இது ஒரு பக்கம் இருக்க சிவன் இயக்கத்தில் சமந்தா, நயன்தாரா ஆகியோருடன் ஜோடி போட விஜய் சேதுபதி தற்போது ரெடியாக இருக்கிறார் இப்படி தொடர்ந்து படங்களை சுற்றி தன் கையில் வைத்திருக்கும் விஜய் சேதுபதியை தற்போது ஓரமாக உட்கார வைத்துவிட்டது கொரோனா இரண்டாம் கட்ட அலை.
சினிமாவில் ஓடிக்கொண்டு இருந்த விஜய் சேதுபதி மீண்டும் எப்பொழுது சூட்டிங் தொடங்கும் என ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார் ஆனால் தற்போது கொரோனா தீவிரமடைந்து உள்ளதே தவிர குறைந்தபாடில்லை இதனால் பிரபலங்கள் வீட்டில் தனக்கு தெரிந்த வேலையை செய்து வருகின்றனர்.
இப்படி இருக்க நடிகர் விஜய் சேதுபதி பொழுதை கழிக்க அவர் மங்கா மரத்தின் ஓரத்தில் நின்று மாங்காய்களை பிச்சி வீசுகிறார் அந்த மாங்கையை வேறு ஒருவர் பிடித்து வைக்கும் வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகிறது இதனை பார்த்த ரசிகர்கள் சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்த எங்க தலைவன் விஜய் சேதுபதியையே மங்கா பறிக்க வச்சுட்டாங்களே என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.
MakkalSelvan@VijaySethuOffl Recent Video
Beautiful view ❤️@VijaySethuOffl @Chengai_VSPFC @VijaySethuFans pic.twitter.com/YwUkI9Kf9f
— 𝗕𝗨𝗟𝗟𝗘𝗧 𝗥.𝗩𝗜𝗚𝗡𝗘𝗦𝗛 (@Bulletvikki) May 26, 2021