சினிமாவில் சிறந்த இயக்குனர்களை தேர்வு செய்து நடித்து வருபவர் பிரபாஸ் இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தாலும் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி உடன் கூட்டணி அமைந்து பாகுபலி சீரிஸில் நடித்த பிறகுதான் இவரது மார்க்கெட் இந்திய அளவில் அதிகரித்தது.
பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவரது நடிப்பில் உருவாகும் அனைத்து திரைப்படம் மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் அதோடு மட்டுமல்லாமல் அவரது சம்பளமும் தற்போது அதிகரித்துள்ளது. இருபின்னும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பிரபாஸை பெருமளவு தெலுங்கு சினிமாவில் தெரிவு செய்து வருகின்றனர் அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது ராதேஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற பல்வேறு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.
இந்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அவர் தொட முடியாத உச்சத்தை அவர் எட்டுவார் என மக்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. பிரபாசுக்கு தெலுங்கு சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதால் இவரது திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகின்றன அந்த வகையில் இந்த திரைப்படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இப்படியிருக்க பிரபாஸ் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு அது ஒரு சர்ப்ரைஸ் செய்வது வழக்கம் அந்த வகையில் சில நடிகைகளுக்கு சுவையான மதிய உணவை அனுபவிப்பது அவரது வழக்கமாக இருந்து வந்துள்ளது. முன்புகூட பிரபாஸ் தன்னுடன் நடித்த நடிகைகளான ஸ்ருதிஹாசன் மற்றும் பூஜா ஹெக்டேக்கு உணவு அனுப்பிவைத்து அசத்தியுள்ளார்.
அதுபோல தற்போது பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூருக்கு நடிகர் பிரபாஸ் திடீரென பிரியாணி அனுப்பி வைத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதை பார்த்த கரீனா கபூருக்கு செம்ம சந்தோஷம். பாகுபலி நீங்கள் அனுப்பிய சிறந்த உணவுக்கு நன்றி என கரீனா கபூர் பதில் தெரிவித்தார் பிரபாஸ் அனுப்பிய உணவை படமெடுத்து அதற்கு நன்றி தெரிவித்து அந்த பதிவுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.