‘அடிச்சு’ தூக்கும் கனமழை.! 105 பேர் பலி.! 28 லட்சம் பேர் பாதிப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்

ஒருபக்கம் கொரோனாவால் அல்லாடிக்கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் பல பகுதிகளில் கனத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.அந்த வகையில் அசாம் மாநிலத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கன மழை விடாமல் பெய்தவாறே உள்ளது.

தற்பொழுது வரை அசாமில் 28 மாவட்ட மக்கள் கடுமையான மழையினால் பாதிக்கப்பட்டு திண்டாடி வருகின்றனர்.அங்குள்ள பிரம்மபுத்திரா போன்ற ஆறுகளும் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அங்குள்ள விளைநிலங்கள், சாலைகள், பாலங்கள், வீடுகள் உள்ளிட்டவை நீரினால் முழுகி உள்ளது தற்போது மக்கள் தங்க இடமின்றி, உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.

அந்த நிலையில் கன மழையினால் வெள்ளத்தில் சிக்கி 105 பேர் இதுவரையிலும் இறந்துவிட்டார்கள். அந்தவகையில் அசாம் மாநிலத்தில் உள்ள 28 லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து போராடி வருகின்றன.

தற்பொழுது அந்த மாநில அரசு மக்கள் தங்குவதற்காக ஒரு சில முகாம்கள் வைத்து பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த முகாமில் மொத்தம் 649 நிவாரண முகாம்கள் அதற்காக அமைக்கப்பட்டு மழை வெள்ளத்தில் சிக்கிய 550 பேரை இதுவரை காப்பாற்றி விட்டுள்ளார்கள் வெள்ளம் அதிகமாக காணப்பட்ட பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளுக்கு சென்று மக்களை மீட்டெடுக்க குழுவினர்கள்  போராடி வருகின்றனர்.

Leave a Comment