50வது நாளைக் கடந்த ஆர்யாவின் டெடி.! OTT யில் வசூல் சாதனை

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஆர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் டெடி திரைப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அந்தவகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த என் இனிய தனிமையே பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. இத்திரைப்படத்தை சக்தி சௌந்தரராஜன் இயக்கியிருந்தார்.

ஆர்யாவுக்கு ஜோடியாக அவரின் மனைவி சாயிஷா நடித்திருந்தார். இவர்களைத் தொடர்ந்து மகிழ்மிருந்தேனி, கருணாகரன், சதீஷ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட நடிகர் நடிகைகளின் கூட்டணியில் டெடி திரைப்படம் உருவானது.

இத்திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்திரைப்படம் ஓடிடி வழியாக கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி ஹாட்ஸ்டார்ரில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் இன்று வரையிலும் இத்திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் முடிந்துவிட்டது. முன்பெல்லாம் ஒரு திரைப்படம் தியேட்டரில் தொடர்ந்து 50 நாட்கள் ஓடினால் கொண்டாடும் காலம் மாறி தற்போது ஓடிடியில் 50 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது என்பதை கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தை தயாரித்த ஸ்டுடியோ நிறுவனம் ரசிகர்கள் மத்தியிலும் டெடி திரைப்படம் பெரிதாக பிரபல முடியாது என்று கூறி இருந்தார்கள்.ஆனால் இவர்கள் கூறியதை முறியடிக்கும் வகையில் ஆனால் தற்பொழுது 50வது நாளில் ஓரளவிற்கு வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றுள்ளதாகவும்,ஓடிடி வழியாக பார்க்க படங்களில் டெடி  திரைப்படத்தை தான் அதிகமாக பார்த்துள்ளார்கள் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.