பிரபல OTT தளத்தில் வெளியாகும் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படம்.!

0

சமீபகாலமாக தமிழ் திரையுலகில் நடித்து வரும் பல நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி இணையதளம் வழியாக வெளியாகி வருகிறது இப்படி இருக்கும் நிலையில் ரசிகர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள் தங்களுக்கு பிடித்த நடிகரின் திரைப்படம் என்றால் அது திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் நினைப்பார்கள் அந்த வகையில் பார்த்தால் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி விட்டது.

அதேபோல் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படமும் நேற்று அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக தகவல் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி இருந்தது அதனை தொடர்ந்து தற்பொழுதும் ஒரு பிரபல நடிகரின் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் அந்த நடிகர் என்று கேட்டால் வேறு யாருமில்லை தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களில் நடித்து வரும் ஆர்யா தான் இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் தற்போது இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் ஆர்யாவின் திரைப்படங்கள் மிகவும் நன்றாக இருக்கும் இதனை எதற்கு இந்த வழியில் வெளியிடுகிறார்கள் எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை நாங்கள் எவ்வளவு காலங்கள் ஆனாலும் இருக்கிறோம் எங்களுக்கு நேரடியாக திரையரங்குகளில் வெளியிடுங்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

aarya67
aarya67

ஒரு சில ரசிகர்கள் ஆர்யாவின் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் மிகவும் திருப்புமுனையாக இருக்கும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து விடும் எங்களுக்கு இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறதா எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என கூறி வருகிறார்கள்.