ஹீரோயின் போல் இருக்கும் ஆர்யாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்.!

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாடல் ஆகவும் பணியாற்றியுள்ளார் மேலும் ஆர்யா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் படங்களை தயாரித்துள்ளார் இந்த நிலையில் ஆர்யா சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஃபிலிம்ஃபேர் விருது மற்றும் விஜய் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். மேலும் ஆர்யா அதிக வருமானம் ஈட்டி இந்திய பிரபலங்களின் அடிப்படையில் கொண்ட போர்ஃபஸ் இந்திய செலிபிரிட்டி பதிப்பில் இவரும் இடம் பெற்றார் இவர் முதன்முதலில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியாகிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார் இந்தத் திரைப்படத்திற்காக தான் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான விருது கிடைத்தது.

இந்த நிலையில் உள்ளம் கேட்குமே, கலாபக்காதலன், பட்டியல் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். பட்டியல் திரைப்படத்தில் முரட்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் இவருக்கு படங்களில் நடிப்பதற்கு முன்னேற்றம் கிடைத்தது. மேலும் நான் கடவுள், ஓரம் போ, சர்வம், மதராசப்பட்டினம் காதல் சொல்ல வந்தேன், பாஸ் என்ற பாஸ்கரன் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியாகிய படம் டெடி இந்த நிலையில் ஆர்யா தன்னுடன் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்து வந்த சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். மேலும் ஆர்யா நான் கடவுள் திரைப்படத்தில் அகோரியாக நடித்ததால் விமர்சனரீதியாக அனைவரின் பாராட்டை பெற்றார்.

நடிகர் ஆர்யா தனது வாழ்க்கையில் சில விஷயங்களை மட்டும் தவறாமல் செய்து வருவார். இந்த நிலையில் தற்போது ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்று வருகிறது இந்த திரைப்படத்தை ரஞ்சித் அவர்கள் இயக்கியுள்ளார் ஆங்கில  குத்துச் சண்டையை  மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

ஆர்யா தன்னுடைய குடும்பங்களை இதுவரை மீடியா பக்கமே காட்டியதே கிடையாது அந்த வகையில் ஆர்யாவின் தங்கை புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அதை பார்த்து ஆர்யா ரசிகர்கள் ஆர்யாவுக்கு இவ்வளவு அழகான தங்கச்சி இருக்காங்களா என புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்.