டூப் போடாமல் நடிக்க ஆசைப்பட்டு விபத்தில் சிக்கிய ஆர்யா அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகர்களில் ஒருவர் தான் ஆர்யா இவர் சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள சார் பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆர்யா இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடிக்கும் ENEMY என்ற திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வந்தார் விஷாலும் ஆர்யாவும் அவன் இவன் திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

இந்நிலையில் படம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் ஷூட்டிங்கில் ஆர்யா நடிக்கும் சண்டைக்காட்சி படமாக்க பட்ட நிலையில் அவர் டூப் போடாமல் நடித்ததன் மூலம் கீழே விழுந்து காயம் அடைந்தாராம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்யா சிகிச்சை முடிந்த கையோடு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து மிஞ்சியுள்ள சண்டை காட்சிகளை நடித்துக் கொடுத்தாராம்.

காயம் அடைந்தால் கூட பரவாயில்லை படப்பிடிப்பை எப்படியாவது முடிக்க வேண்டும் என படப்பிடிப்பிற்கு வந்து நடித்ததால் ஆர்யா செய்த காரியம் படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

aarya
aarya

Leave a Comment