தமிழ் சினிமாவில் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என்ற சங்கத்தை சார்ந்தவர்கள் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா.ஆனால் ஆர்யா தன்னை விட 15 வயது குறைவான இளம் நடிகை சாயிஷாவை கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆர்யா சாயிஷாவுடன் இணைந்து முதன்முதலில் கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் ஆர்யாவுக்கு சாயிஷாவின் மீது காதல் மலர்ந்தது.எனவே ஆர்யா நேரடியாக சாயிஷாவின் அம்மாவிடம் தனது காதலை சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார்.
பிறகு இவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு சாய்ஷா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் ஆர்யாவுடன் இணைந்து காப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது டெடி திரைப்படத்திலும் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படம் மார்ச் 12ஆம் தேதி ஹாட்ஸ் ஸ்டாரில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை சக்தி சௌந்தரராஜன் இயக்கியுள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் ஆர்யா சாயிஷா இருவரும் தங்களது இரண்டாவது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். எனவே அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக்கான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.
