முதன் முறையாக தனது மகளின் வீடியோவை வெளியிட்ட ஆர்யா சாயிஷா.! அச்சு அசல் சாயிஷா போல் இருக்கிறாரோ

sayeesha
sayeesha

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்களை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ஒரு சில ஜோடிகள் ஒரு சில வருடங்களில் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் அப்படி பல நடிகர் நடிகைகளை நாம் உதாரணத்திற்கு கூறலாம். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமந்தா நாக சைதன்யா என பலரை கூறிக்கொண்டே செல்லலாம்.

அதே போல் மிகவும் சந்தோஷமாக வாழ்பவர்களில் சூர்யா ஜோதிகா பிரசன்னா சினேகா ஆகியோர்களை தொடர்ந்து ஆர்யா சாயிஷா திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடன் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்து வந்த சாயிஷா என்பவரைதிருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஜூலை 23ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது அந்தப் பெண் குழந்தைக்கு ஆரியானா என பெயர் வைத்தார்கள். ஆர்யா மற்றும் சாயிஷா சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் இவர்கள் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள் என்னதான் இவர்கள் தங்களுடைய புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டாலும் அவர்களின் மகளின் புகைப்படம் மற்றும் வீடியோவை மட்டும் பதிவிட்டதே கிடையாது.

இந்த நிலையில் சாயிஷா தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஆன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் தன்னுடைய தாயார் மற்றும் மகளுடன் பண்ணை வீட்டில் இருக்கும் காட்சிகளை பகிர்ந்துள்ளார் அந்த வீடியோவில் சாயிஷாவின் மகள் செம க்யூட்டாக இருக்கிறார் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் சாயிஷா போல் இருக்கிறார் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்