தனது மனைவியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டு – மொரட்டு சிங்கள் ரசிகர்களை கதற வைத்த ஆர்யா.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் படிப்படியாக வில்லன், ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்து தற்போது தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. அண்மைகாலமாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்து உள்ளது.

இதனால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நல்ல இடத்தை பிடித்து உள்ளார். தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு சினிமாவில் வில்லனாகவும் நடித்து அசத்தியவர் நடிகர் ஆர்யா. இப்படி ஓடி கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் சார்பட்டா பரம்பரை, டெடி ஆகியவை தொடர்ந்து அன்மையில் அரண்மனை மூன்றாம் பாகத்திலும் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மேலும் ஒரு புதிய பேய் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி சினிமா உலகில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் ஆர்யா. நடிகை சாயிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை சாயிஷா தமிழில் வனமகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து காப்பான், கஜினிகாந்த், டெடி போன்ற படங்களில் நடித்து அசத்தினார்.

நடிகை சாயிஷா, நடிகர் ஆர்யாவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான பிறகும் இருவரும் சேர்ந்து பல்வேறு படங்களில் நடிக்கின்றனர் இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் மிக சிறப்பாக வாழ்ந்து வரும் ஆர்யா, சாயிஷா ஜோடி அவரது ரசிகர்களை கவரும்படி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் இது போதாத குறைக்கு இருவரும் கொஞ்சி விளையாடிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

arya and sayesha

Leave a Comment

Exit mobile version