கமலின் விருமாண்டியை போல் சண்டியர் கெட்டப்பில் மிரட்டும் ஆர்யா.! வெளியாகிய வெறித்தனமான போஸ்டர்.

தமிழ் சினிமாவில் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தவர் ஆர்யா இவர் ஆரம்ப காலகட்டத்தில் கட்டுமஸ்தான உடல் அமைப்பை வைத்துக்கொண்டு வில்லனாக நடித்து வந்தார் பின்பு படிப்படியாக தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு விஷ்ணுவரதன் இயக்கத்தில் வெளியாகிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஓரம்போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கின்ற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம், சார் பட்டா பரம்பரை, என பல திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார்.

இவர் ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது தன்னுடன் நடித்த சாயிஷா என்பவரை காதலிக்க தொடங்கினார் இந்த காதல் கடைசியில் திருமணத்தில் முடிந்தது இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் மேலும் தற்பொழுது இவர்களுக்கு ஒரு அழகான மகள் இருக்கிறார்.

அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது ஆர்யா இயக்குனர் முத்தையா இயக்கத்தில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில் கரடு முரடான கிராமத்து இளைஞராக கிட்டத்தட்ட விருமாண்டி கமல் போல் சண்டியராக தோற்றமளிக்கிறார்.

தற்பொழுது அதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சண்டியர் தனம் பண்ணும் கட்டுமஸ்தான உடல் அமைப்புடன் ஆர்யா இருப்பதாகவும் கிட்டத்தட்ட விருமாண்டி கமல் போல் மிரட்டலாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி வெளியாக இருப்பதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

arya
arya

Leave a Comment