ரயிலில் செல்லும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா வைரலாகும் புகைப்படம் இதோ.!

0

actor arya in aranmanai part 3 shoouting photo viral: வெள்ளித்திரையில் ஆர்யா என்றால் பல ரசிகர்களுக்கு பிடிக்கும் ஏனென்றால் இவர் நடித்திருந்த படங்கள் எல்லாமே ஏதாவது ஒரு கருத்தை இவரது ரசிகர்களுக்கு கண்டிப்பாக கூறியிருப்பார்.

இவர் நடித்திருந்த அவன் இவன், கடம்பன், வட்டாரம், மாயக்கண்ணாடி, சர்வம், சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் போன்ற எல்லா திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனையடுத்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆர்யாவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து உள்ளார் அதில் ஆள் அடையாளம் தெரியக்கூடதென கேப், மாஸ்க் அணிந்து கொண்டு முகத்தை மூடி உள்ளார்.

அப்படி எடுக்கபட்ட புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வேற லெவல் நீங்க என்று கூறிவருகிறார்கள்.

இது வந்த புகைப்படம்