தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆர்யா.இவர் 2003 ஆம் ஆண்டு உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். தொடர்ந்து அறிந்தும் அறியாமலும் மற்றும் பல படங்களில் அவ்வப்போது நடித்து வந்தார் அவர்.
அவர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் நான் கடவுள் இப்படத்திளல் ஹீரோவாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.இதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா கடைசியாக நடித்த மகாமுனி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் அதைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக பா ரஞ்சித் இயக்கவுள்ள ‘சல்பேட்டா’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஆர்யா அவர்கள் நடிக்க உள்ளார்.இப்படம் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருவதால் இப்படத்திற்காக சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார்.
நடிகர் ஆர்யா அவர்கள் ரசிகர்களும் இப்படத்தை பற்றிய தெரிவித்திருந்த நிலையில் மேலும் தனது புதிய தோற்றத்துடன் கூடிய புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷபடுத்தி வந்த நிலையில் தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் காட்சி சமூக இணையதளத்தில் வெளிவந்து ரசிகர்களை அதிர வைத்ததோடு மட்டுமல்லாமல் அவரது மனைவியான நடிகை சாயிஷா அவர்களையும் திடுக்கிட வைத்தது.
இது குறித்து பேசிய சாயிஷா அவர்கள் தனது கணவர் பார்க்கும் பொழுது தனக்கு வலிப்பதாகவும், அவர் கடினமாக உழைக்கிறார் என்றும் வேதனையோடு விட்டுத் செய்துள்ளார்.
It hurts just looking at you hubzy!! Too much hardwork! #proudwife ?????? https://t.co/OWGW1jt9ZS
— Sayyeshaa (@sayyeshaa) March 2, 2020