சிம்பு நடிப்பில் பத்து தல படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற 31ஆம் தேதி அன்று திரையரங்குகளில் மிகவும் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நிலையில் ட்ரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தில் சிம்பு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இவரைத் தொடர்ந்து கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது அதில் ஆர்யாவின் மனைவி நடிகை சாயிஷா செம குத்தாட்டம் போட்டிருக்கும் நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் புஷ்பா படத்தில் கிளாமர் நடனமாடிய சமந்தாவையே ஓவர் டாக் செய்துவிட்டார் சாயிஷா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சாயிஷாவுக்கு நடனம் ஆடுவது மிகவும் பிடித்த ஒரு விஷயம் நடிப்பதையும் தாண்டி நடனம் ஆடுவதில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் பத்து தல படத்தில் ராவடி பாடலுக்கு செம ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ளார். எனவே இதனை பார்த்த ரசிகர்கள் திருமணமாகி குழந்தை பிறந்ததற்கு பிறகும் இது தேவைதானா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

எனவே இதற்கு பதில் அளிக்கும் வகையில் சாயிஷா நடனம் ஆடுவது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் அது நான் செய்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்பது போன்ற ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்பொழுது இந்தப் பாடலுக்கு சாயிஷாவின் கணவர் நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கமெண்ட் பதிவு செய்துள்ளார். அதில் இந்த பாடலை பார்த்த பிறகு உங்களை பெரிய திரையில் பார்ப்பதற்கு காத்திருக்கிறேன்.. நீங்கள் எப்பொழுதுமே பெஸ்ட் என்றும் இது வெறும் தொடக்கம் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே ஆர்யாவின் இந்த கமெண்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Can't wait to see you on big screen 🔥🔥🔥😍😍😍you are the best love 😘😘🤗This is just the beginning 😉👍 https://t.co/tDZt94y8kE
— Arya (@arya_offl) March 25, 2023