தமிழில் மெகா ஹிட் ஆன அருவி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஹீரோயின் யார் தெரியுமா.?

2017 ஆம் ஆண்டு அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன், லக்ஷ்மி கோபால், கவிதா பாரதி, ஸ்வேதா சேகர், பிரதீப் ஆண்டனி ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய திரை படம் அருவி இந்த திரைப்படத்தில் அதிதி பாலன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் மற்ற நடிகைகள் கூட நடிக்கத் தயங்குவார்கள் அந்த அளவு மிக முக்கிய கதாபாத்திரம் அதனால் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது அருவி படத்திற்கு பிறகு அதிதி பாலன் அவர்களுக்கு நல்ல பட வாய்ப்பும் அமைந்து வருகிறது.

இந்த நிலையில் அருவி திரைப்படத்திற்கு அதிதி பாலன் விஜய் அவார்ட்ஸ் பெற்றார் அதுமட்டுமில்லாமல் படமும் விஜய் அவார்ட் அடைந்தது. இதெல்லாம் ஒருபுறமிருக்க இந்த திரைப்படத்தை தற்போது  ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

ஹிந்தியில் அதிதி பாலன் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தங்கள் திரைப்படத்தில் புகழ்பெற்ற பாத்திமா சனா ஷேக் ஹிந்தி ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம் இந்த திரைப்படத்தை ஈ நிவாஸ் என்பவர் இயக்க இருக்கிறார்.

aditi balan
aditi balan

இந்த நிலையில் பாத்திமா தனது புதிய அணியுடன் போஸ் கொடுக்கும் படத்துடன் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது இந்த நிலையில் இதனை உறுதிபடுத்தும் விதமாக எஸ்ஆர் பிரபு அவர்கள் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

fatima-sana-shaikh
fatima-sana-shaikh

Leave a Comment