பல வருடங்களுக்கு பிறகு வரும் அருண்விஜயின் படம்.? எப்போ யாரு கூட மோத போகுது தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் படிப்படியாக ஹீரோயின் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் அருண் விஜய் இளம் வயதிலேயே ஹீரோவாக அடியெடுத்து வைத்தால் ஆரம்பத்தில் சிறப்பான கதைகளை அவரால் தேர்வு செய்ய முடியாமல் நடித்ததால் ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

மேலும் இருக்கிறாரா.? இல்லையா.? என்ற நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் அஜித்தின் “என்னை அறிந்தால்” என்ற திரைப்படத்தில் நடித்தார் அப்போது அவருக்கு வில்லன் ரோல் கொடுத்து அந்த படதிற்காக அருண் விஜய்யும் மெனக்கெட்டு சிக்ஸ்பேக் வைத்து எல்லாம் நடித்தார் அதற்கான பலனாக நல்ல வரவேற்பும் கிடைத்தது அன்றிலிருந்து சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பு சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவரது நடிப்பில் சீனம் மற்றும் பாக்ஸர் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் அருண் விஜய் நடிப்பில் ரத்தின சிவா இயக்கத்தில் “வா டீல்” என்ற திரைப்படம் பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது ஆனால் சில காரணங்களால் திரைப்படம் தள்ளிக்கொண்டே போனது.

அருண் விஜய்யும் இந்த படமும் பெருமையாக வரட்டும் என கூறிய மற்ற படங்களில் நடித்தவருக்கு இப்படி போய்க் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது “வா டீல்” திரைப்படம் தீபாவளியை குறி வைத்து ரிலீஸ் ஆக உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தீபாவளியை பல டாப் நடிகர்கள் கூறி வைத்த நிலையில் அருண் விஜய்யும் இந்த தீபாவளி ரேஸில் கலந்து கொள்கிறார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ரேஸ் மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.