மிண்டும் என்னை அறிந்தால் விக்டர்!! தெரிக்கவிடும் அருண் விஜய்…

arunvijay next movie character ranjith which is defininetly speakable like victor character: தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஹீரோவாக தொடங்கி பல வெற்றிப்படங்களை கொடுத்து அதன்பின் சில படங்கள் சரியாக ஓடாததால் கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டு மறுபடியும் அஜித் திரைப்படத்தில் வில்லனாக களம் இறங்கி தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டு வருபவர் அருண் விஜய்.

தனது ரீ என்ட்ரிக்கு பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்திலும் இவர் தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்கள் வித்தியாசமாக இருந்தது. அதனாலேயே இவருக்கு நிறைய திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றிப் படமாக அமைந்தது என கூறலாம்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இவர் குற்றம் 23, தடம், செக்கச் சிவந்த வானம், சகோ போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அந்த வகையில் இவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் அக்னி சிறகுகள் என்ற திரைப்படம் என்னை அறிந்தால் திரைப்படத்தின் விக்டர் கதாபாத்திரத்தை போல் மிகப் பெரிய அளவில் பேசப்படும் என அழுத்தமாகக் கூறியுள்ளார்.

மேலும் இந்த அக்னி சிறகள் திரைப்படத்தை தொடர்ந்து சினம், பாக்சர் போன்ற திரைப் படங்களில் நடித்து கொண்டுள்ளார். விக்டர் கதாபாத்திரம் போல் ரஞ்சித் கதாபாத்திரமும் இருக்கும் என அவர் கூறியதை கேட்டு ரசிகர்கள் ஆவலுடன் திரைப்படத்தை பார்க்க எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Comment