அருண் விஜய்யின் 31வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.! மாஸ் காட்டுகிறாரே

இளம் வயதிலேயே சினிமா உலகில் நடிகர் தொடங்கியவர் அருண் விஜய். ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு போதிய அனுபவம் இல்லாததால் சரியான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடியாமல் போனது.

இதனால் பெரும் தோல்வியை சந்தித்தாலும் பிறகு அதை நன்கு புரிந்து கொண்டு சிறப்பம்சம் உள்ள படங்களை தற்போது தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் தடம், தடையறத்தாக்க, குற்றம் 23 ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது தனது 31வது நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை விஜய் ராகவேந்திரா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தற்போது “பார்டர்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார். மேலும் புதுமுக நடிகை ஸ்டேஃபி பட்டேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் இத்திரைப்படத்திற்கு சாம்ஸ் சி எஸ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சென்னையில் நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் மூத்த நடிகர்களான விஜயகுமார், நரேன் மற்றும் இயக்குனர் ஏஎல் விஜய் தயாரிப்பாளர் டி சிவா இசையமைப்பாளர்  சாம்ஸ் சி எஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இவர்கள் முன்னிலையில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இப்படம் குறித்து பேசிய அருண் விஜய் நான் தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்து உள்ளேன். அவர்களில் நம்பக்கூடிய மற்றும் திறமையான இயக்குனர்களில் ஒருவர் அறிவழகன் என குறிப்பிட்டார்.

மேலும் கைதி படத்தில் சாம்ஸ் இசை மிகப்பெரிய பலம் சேர்த்தது அவர் இந்த படத்திற்கு வந்தது எங்களுக்கு பெரும் பாக்கியம் எனவும் கூறினார்.இந்த திரைப்படத்தின் பின்னணி இசையை மிகப்பெரிய பலம் சேர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த படம் நிச்சயம் உங்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் அதில் எந்த ஒரு குறைபாடும் இல்லை.

Leave a Comment