கனா திரைப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகருடன் இணைந்த அருண் ராஜா காமராஜ்.! யாருடன் தெரியுமா.?

அருண்ராஜா காமராஜ் அவர்கள் கனா படத்தை இயக்கி தமிழ் திரை உலகில் இயக்குனராக பிரபலமடைந்தவர். அருண் ராஜா காமராஜ் பன்முக தன்மை கொண்டவராக விளங்கி வருகிறார் இவர் பாடலாசிரியராகவும், நடிகராகவும் மற்றும் இயக்குனராகவும் தனது திறமையை வெளிப்படுத்துகிறார்.

கனா திரைப்படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தை சிவகார்த்திகேயன் அவர்கள் தயாரித்திருந்தார் மற்றும் சிறிது வேடத்திலும் நடித்து இருந்தார்.

கனா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் நல்ல லாபத்தையும் ஈட்ட இதைத் தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் அவர்கள் நடிகர் கார்த்திக் அவர்களுடன் தற்போது கை கொடுத்துள்ளார். கார்த்திக்கின் தேவ் படத்தை தயாரித்த ப்ரிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது

இப்படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பது உண்மை ஆனால் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Comment