ரஜினியின் எதார்த்தமான நடிப்பில் வெளியான “அருணாச்சலம்” திரைப்படம்.. அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

0
rajini-
rajini-

நம்பர் ஒன் ஹீரோ என்ற பட்டத்தை தக்கவைத்துக் கொண்டு ஓடுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்பொழுது இளம் இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி அமைத்து ஜெயில் சம்மந்தப்பட்ட திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த ஒரு படமாக உருவாகி வருகிறது.

இதில் ரஜினி ஜெயில் அதிகாரியாக நடிக்கிறார் அவருடன் இணைந்து மோகன்லால், சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். படபிடிப்பு ஜோராக நடந்தாலும் மறுபக்கம் அவ்வபொழுது புகைப்படங்கள் லீக்காகி கொண்டு தான் இருக்கிறது அண்மையில் கூட ஒரு ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டது.

அதன் புகைப்படம் இணையதள பக்கத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இருப்பினும் படக்குழு அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் படத்தின் வேலைகளில் மும்பரம் காட்டி வருகிறது ரஜினி ஜெயிலர் படத்தை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் திரை படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி அடுத்தடுத்த படங்களில் ரஜினி புக் ஆகி இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் 90களில் ரஜினி நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் வெளிவந்து ஹிட் அடித்துள்ளன அதில் ஒன்று அருணாச்சலம் படம்.. 1997 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவானது இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு கமர்சியல் படமாக இருந்தது.

இதில் ரஜினி உடன் இணைந்து வடிவுக்கரசி, ரகுவரன், ரம்பா, செந்தில், சௌந்தர்யா மற்றும் பலர் நடித்திருந்தனர் படம் வெளிவந்து அப்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் புதிய உச்சத்தை தொட்டது 90களில் வெளியான இந்த திரைப்படம் 32 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்தியாவில் 25.55 கோடியும் வெளிநாடுகளில் 7 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.