வசூலில் புதிய உச்சத்தை தொடும் அருண் விஜயின் “யானை படம்” – இதுவரை மட்டும் அள்ளிய கோடிகள் இவ்வளவா.?

yaanai
yaanai

நடிகர் அருண் விஜய் 17 வயதிலேயே சினிமா உலகில் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார் இருப்பினும் ஆரம்பத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்ததால் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் போனார். இருப்பினும் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த..

அவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதற்காக அதிரடியாக தனது உடம்பை ரெடி செய்து அந்த படத்தில் நடித்தார். அதற்கான பலனும் கிடைத்தது. தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோ வில்லனாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் குற்றம் 23, தடம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தார் தற்பொழுது கூட ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, புகழ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருப்பதால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை அருண் விஜயின் யானை திரைப்படம் 16 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

வருகின்ற நாட்களிலும் யானை திரைப்படம் நல்லதொரு வசூலை அள்ளும் என தெரிய வருகிறது இதனால் நடிகர் அருண் விஜய் மற்றும் படக்குழு செம்ம சந்தோஷத்தில் உள்ளது.