கல்லாப்பெட்டியை நிரப்பும் “அருண் விஜயின் யானை படம்” – மலேசியாவில் மட்டுமே இத்தனை கோடியா.?

yaanai
yaanai

நடிகர் அருண் விஜய் கல்லூரி படிக்கும் வயதிலேயே தமிழ் சினிமாவில் நடிகராக நடிக்க தொடங்கியுள்ளார். இவரது அப்பா நடிகர் விஜயகுமார் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலம் அடைந்ததன் காரணமாக அருண் விஜய்க்கு மிக எளிமையாக சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் வாய்ப்பு கிடைத்து என்ன பிரயோஜனம் ஆரம்பத்தில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்தன. இருந்தாலும் அருண் விஜய் துவண்டு விடாமல் தொடர்ந்து நடித்து வந்ததால் ஒரு கட்டத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த தடம், குற்றம் 23 போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதை தொடர்ந்து தமிழில் பல ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்பட்டு வரும் இயக்குனர் ஹரியுடன் கூட்டணி அமைத்து யானை என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

படமும் சமீபத்தில் வெளியாகிய ஆக்சன் சென்டிமென்ட் காதல் போன்ற அனைத்தும் கலந்து உள்ளதால் மக்கள் இந்த படத்தினை விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், யோகி பாபு போன்ற பலரும் சிறப்பாக நடித்திருந்தனர். அதனால் படம் வெளிவந்து ஒவ்வொரு நாளும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் யானை படம் வெளிவந்து தமிழகத்தில் மட்டும் இதுவரை 17 கோடி வசூலித்து உள்ளதாம். மேலும் யானை படம் வெளியான மற்ற இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்ற நிலையில் மலேசியாவில் யானை திரைப்படம் 1.7 கோடி வசூலித்துள்ளது. இனிவரும் நாட்களிலும் யானை படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.