புதிய சிக்கலை சந்திக்கும் அருண் விஜயின் “பார்டர்”.! நல்லா வந்து பொறுக்கலையா.! பிரச்சனை மேல் பிரச்சினை வருதே புலம்பும் படக்குழு.!

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே திரை உலகில் ஹீரோவாக நடிக்க வந்தவர் அருண் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு தொடர் தோல்வி படங்களை கொடுத்தவர் சினிமா உலகில் காணாமல் போன இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.

அப்போ கிடைத்த வெற்றியை தக்க வைத்துக்கொண்டு பயணிக்கிறார். அப்பொழுதிலிருந்து தற்பொழுது வரை சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் கவனிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக தற்போது அருண் விஜய்யும் மாறியுள்ளார்.

அருண் விஜய் நடிப்பில் தற்போது தொடர்ந்து பல்வேறு படங்கள் வெளியாக உள்ளன அந்த வகையில் பாக்ஸர், சீனம் மற்றும் பார்டர் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க இருக்கின்றன.

படம் சிறப்பாக வந்துள்ளது என படக்குழு சமீபத்தில் சொல்வதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் இந்த படத்தின் பாசிட்டிவ் கமென்ட் அதிகம் வருவதாக கூறுகின்றனர் இந்த நிலையில் இப்படி ஒரு சிக்கலை படக்குழு சந்தித்துள்ளது பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் திரைப்படத்தின் டைட்டில் ஏற்கனவே நடிகர் தீனா நடிப்பில் உருவான படத்திற்கு பார்டர்  பெயர் வைத்து சென்சார் வரை சென்றுள்ளது.

partar

அதே டைட்டிலை அருண் விஜய் படத்திற்கு வைத்துள்ளதால் அந்த படத்தின் டைட்டிலை தற்போது மாற்ற வேண்டிய சூழல் இருப்பதாக தெரிய வருகிறது விரைவில் அறிவழகன் இதற்கான டைட்டில் புதிதாக வைக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version