மாஸாக என்றி கொடுக்கும் அருண் விஜய்.! டிரெய்லரே சும்மா கிழி கிழின்னு கேக்குது.

தமிழ் சினிமாவில் 90s காலகட்டத்தில்  சாக்லேட் பாயாக  நடித்து  தற்போது வில்லனாகவும் ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டு வருபவர் நடிகர் அருண் விஜய்.இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்தார்.  அதன்பிறகு குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம் என  சுமாரான திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் முன்னணி நடிகரான சூர்யாவை வைத்து சிங்கம், சிங்கம் 2 என பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஹரி அவர்கள் தற்போது அருண் விஜய்யை வைத்து  யானை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஆக்ஷன் மற்றும் எண்டர்டெயினர் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் அவர்கள் ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, சமுத்திரகனி, அம்மு அபிராமி மற்றும் கே ஜி எஃப் படத்தில் நடித்த ராமச்சந்திர ராஜா என பல பிரபலங்கள்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அருண் விஜயின் யானை திரைப்படம் ஏற்கனவே மே மாதம் 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 17ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் அருண் விஜய்.

மேலும் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் காதல், ஆக்சன், குடும்பங்கள் என செண்டிமெண்ட் காட்சிகள் மாஸ் காட்டியுள்ளது.

Leave a Comment