விக்ரம் மற்றும் சூரியாவையே ஓரங்கட்டும் அளவிற்கு அருண் விஜய்யின் தெறி மாஸ் புகைப்படம்.! குவியும் லைக்

நடிகர் அருண்விஜய் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். அதை தொடர்ந்து இவர் தனதுவிடாமுயற்சியால் நல்ல கதையுள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதன் மூலம் வெற்றியும் கண்டு வருகிறார்.

வாரிசு நடிகர்கள் சினிமாவில் ஜெயிப்பது என்பது கடினமான ஒன்றுதான் அந்தவகையில் அருண்விஜய் தனது திறமையான நடிப்பின் மூலம் மட்டுமே முன்னுக்கு வருகிறார்.தற்போது சினிமாவில் தனக்கான ஒரு பாதையை அமைத்துக் கொள்ள கிட்டத்தட்ட பத்து வருடங்கள் எடுத்துக் கொண்டார்.

சமீபத்தில் இவர் நடித்த தடம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் இவர் அடுத்ததாக மாபியா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் அக்னிசிறகுகள் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அருண்விஜய் மாபியா திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்டார். அது ரசிகர்களிடம் வைரல் ஆனது.

அருண் விஜய் தற்பொழுது தனது சமூக வலைத்தளத்தில் நரம்புகள் அனைத்தும் புடைக்கும் படி ‘எங்கே நீ ஒழிந்தாலும் எதிரில் நிற்பவன்’ என்ற தலைப்புடன் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட்கள் அள்ளிக் குவிக்கிறார்கள்.

இந்த வசனம் படத்தின் வசனம் என பலரும் கூறுகிறார்கள்.

arun-vijay 1

arun-vijay 1

arun-vijay 1
arun-vijay 1

Leave a Comment