டப்பிங் பணியை தொடங்கி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அருண் விஜய்.! எந்த படத்துக்கு தெரியுமா.?

தமிழ் திரை உலகில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பின்பு ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தற்பொழுது கதாநாயகனாக வளர்ந்து நிற்கும் நடிகர் தான் அருண் விஜய். இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் அருண் விஜய் தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் தான் அச்சம் என்பது இல்லையே மிஷன் சாப்டர் 1 இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்காக ஜி.வி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பலமொழி திரைப்படங்களில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.இந்தத் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருக்கலாம்.

அதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதாவது அச்சம் என்பது இல்லையே மிஷன் சாப்டர் 1 படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் தொடங்கியுள்ளார் இதனை அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறார் அச்சம் என்பது இல்லையே மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றால் அருண் விஜய் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என இவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Leave a Comment