அருண் விஜய் மறுத்த படத்தில் வில்லனாக களம் இறங்கும் பிரபலம்.! யார் தெரியுமா.?

0
arun-vijay
arun-vijay

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகர் அருண் விஜய். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கான  வெற்றிப்படங்கள் எந்த ஒரு திரைப்படம் அமைக்கவில்லை இதனாலே நடிகர் அருண் விஜய் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு வில்லனாக அனைவரையும் மிரட்டினார்.

இந்த விக்டர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது இதனால் நடிகர் அருண் விஜய்க்கு படங்களில் நடிக்க வாய்ப்பு குவிய ஆரம்பித்தது அப்படி அவர் நடிப்பில் வெளியான யானை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய்க்கு தெலுங்கு சினிமாவில் ஒரு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் நடிகர் அருண் விஜய் தற்போது ஹீரோவாக நடிக்க ஆசைப்படுவதால் எனக்கு வில்லன் கதை வேண்டாம் என்று அந்த படத்திற்கு மறுப்பு தெரிவித்து உள்லாறாம். வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன் நடித்து வரும் தெலுங்கு திரைப்படத்தில் நாங்க சைதன்யாவுக்கு வில்லனாக காமிட் ஆகி இருந்தார் அருண் விஜய் ஆனால் ஹிரோவாக நடிப்பதால் அந்த படத்திற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை இதனால் வேறொரு நடிகரை தேர்வு செய்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகர் ஜீவா தெலுங்கில் முதன்முதலாக நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் தெலுங்கில் வில்லனாக அறிமுகம் ஆகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் ஒரு நல்ல இடத்தில் இருந்தாலும் தற்போது இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹீரோவாக பார்த்து வந்த இவரை வில்லனாக பார்ப்பது எப்படி என்று தெரியாமல் முழித்து வருகிறார்கள் ஏனென்றால் இவருடைய முகபாவனை வில்லன் கதாபாத்திரத்திற்கு செட்டாகாது என நெடிசங்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள். அப்படி இவர் வில்லனாக நடிப்பதை பார்க்க சில ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் சினிமாவில் ஹீரோவாக நடித்து தற்போது வில்லனாக நடிக்கும் நடிகர்களின் படங்கள் நல்ல வரவேரிப்பு பெற்று வருகிறது அதே போல் இவருடைய படமும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.