பல வருடங்கள் கழித்து வெளியாகும் அருண் விஜய் படம்.? வந்தாலும் நடிகருக்கு சந்தோஷத்தை கொடுக்கலையேப்பா..

இளம் வயதிலேயே சினிமா உலகில் தோன்றிய ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தாலும் அத்தகைய படங்கள் வெற்றி பெறாததால் பல வருடங்களாக சினிமா உலகில் தவித்துக்கொண்டிருந்த இவருக்கு அஜீத்தின் என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது.

இந்த திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக தனது மாறுபட்ட திறமையை வெளிக்காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்தார் இதனை தொடர்ந்து அவர் தமிழில் தடையறத் தாக்க, தடம், குற்றம் 23 போன்ற பல்வேறு சிறப்பு கூறிய படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி னார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம்  “வா டீல்” இந்த திரைப்படம் அருண் விஜய் நடிப்பில் சிவஞானம் இயக்கத்தில் 2014ல் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் அருண் விஜய் உடன் சேர்ந்து நடிகையாக ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

பல பிரச்சனைகள் காரணமாக இந்த படம் பல வருடங்களாக வெளியாகாமல் இருந்து வந்தது.பல வருடங்களாக வெளியாக மாதிரி எந்த இந்த படத்தை தற்போது பெதர் டச் நிறுவனம் தயாரித்திருந்தது அதே சமயத்தில் கேஜஸ் நிறுவனமும் இதில் பங்குதாரர் என்பது குறிபிடத்தக்கது இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது இந்த படத்தை OTT தளத்தில் வெளியிட போவதாக அறிவித்துள்ளது.

அருண் விஜயின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாக OTT தளத்தில் வெளியான உள்ளதால் அருண்விஜய் மிகப்பெரிய அப்செட்டில் உள்ளார்.

ஆனால் தற்போதைய சூழலில் தியேட்டரில் படம் வெளியானால் நமக்கு நாமே மண்ணை தலையில் வாரி போட்டுக் கொள்வதற்கு சமம். இப்போதைய காலகட்டத்தில் நாம் OTT தளத்தில் படம் வெளியிடுவது நல்லது என படக்குழு திட்டம் போட்டு படத்தை வெளியிட உள்ளது. எது எப்படியோ அருண் விஜய்க்கு இது நல்ல படமாக அமைந்தால் போதும் என ஒரு ரசிகர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment