அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாபியா இது திரைப்படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தான் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது, படத்தில் ப்ரியா பவானி சங்கர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அருண் விஜய்க்கு வில்லனாக பிரசன்னா நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை துருவங்கள் பதினாறு புகழ் கார்த்திக் நரேன் தான் இயக்கி வருகிறார், சமீபத்தில் நடைபெற்ற இந்த திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது. மேலும் பரபரப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு சூட்டிங் முடிந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்கள்.
இந்தநிலையில் சமீபத்தில் அருண் விஜய்யின் கெட்டப் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது அதேபோல் நேற்று பிரசன்னாவின் பிறந்தநாள் என்பதால் ஒரு போஸ்டரை வெளியிட்ட பிரசன்னாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர்.
இந்த போஸ்டர் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
