ஒட்டுமொத்த நரம்புகளும் புடைக்கும் படி கட்டுமஸ்தான உடலுடன் அருண் விஜய்.! இணையதளத்தில் வெளியான சினம் படத்தின் போஸ்டர்.!

0

பொதுவாக தமிழ் சினிமாவில் சினிமா பின்புலத்திலிருந்து வரும் நடிகர்கள் பலரும் தோல்வியை தான் சந்திக்கிறார்கள் ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே சினிமாவில் வெற்றி பெறுகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் அருண் விஜய் சினிமா பின்புலத்திலிருந்து வந்து இருந்தாலும் தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். இவர் ஆரம்ப காலத்தில் பல தோல்வி திரைப் படங்களை கொடுத்துள்ளார் ஆனாலும் அதில் இருந்து மீண்டு வந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

அருண் விஜய் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சமீபகாலமாக வெற்றி பெற்று வருகின்றன, அருண் விஜய் என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு தான் சினிமா பயணமே தொடங்கியது என்று கூட கூறலாம் ஏனென்றால் என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக என்ட்ரி கொடுத்து தற்பொழுது ஹீரோவாக கலக்கி வருகிறார்.

தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் அருண்விஜய் சமீப காலமாக தனது சம்பளத்தையும் ஏற்றியுள்ளார், தற்போது அருண் விஜய் நடிப்பில் அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் வா டீல் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

Sinam
Sinam

அதேபோல் அருண்விஜய் வெவ்வேறு கதை களத்தை கொண்ட திரைப்படத்தில் தான் நடித்து வருகிறார் அதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் அருண் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சினம் படக்குழுவினர் நரம்புகள் புடைக்கும் படி இருக்கும் அருண் விஜய்யின் பிறந்தநாள் பரிசாக போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.