ஹாலிவுட் நடிகர் ரேஞ்சுக்கு ஆளே மாறிய நடிகர் அருண் விஜய்.! வைரலாகும் புகைப்படம்..

0

Arun vijay : தமிழ் சினிமாவில் நடிகர் அருண்விஜய் வாரிசு நடிகராக அறிமுகம் ஆனாலும் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார், மேலும் அருண் விஜய் பல தோல்விகளை கொடுத்ததுதான் வெற்றி  என்ற கனியை எட்டிப் பார்த்தார்.

அதிலும் அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டார், விக்டர் என்ற கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் அருண் விஜய்க்கு இது நல்ல ஒரு அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடித்த திரைப்படங்கள் வெற்றி அடைந்தது. அதிலும் அருண் விஜய் நடிப்பில் வெளியாகிய  தடம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது இதனைத்தொடர்ந்து அடுத்ததாக மாபியா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்,

ஆனால் மாபியா திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை இந்நிலையில் அருண் விஜய் தற்போது அக்னி சிறகுகள், பாக்சர் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.. மேலும் அருண் விஜய், படத்திற்கு ஏற்றவாறு தனது உடல் எடையை அதிகரித்து நடித்து வருபவர்.

இந்த நிலையில் அருண் விஜய் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன அந்த புகைப்படத்தில் அருண்விஜய் செம ஸ்டைல் மாஸ் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.