தாடியும் இல்ல மீசை இல்லை புதிய ஹேர் ஸ்டைலில் ஆளே மாறிய நடிகர் அருண்விஜய் வைரலாகும் புகைப்படம்

நடிகர் அருண் விஜய் கடைசியாக நடித்த திரைப்படம் தடம், இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கியிருந்தார், மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, மேலும் அருண் விஜய் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மூடர்கூடம் நவீன இயக்கத்தில் அக்னிசிறகுகள் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த திரைப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, அதனால் அருண் விஜய் அடுத்ததாக பாக்ஸர் திரைப்படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார், இதில் ஒரு குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடிக்கிறார், படத்தை பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விவேக் இயக்கிவருகிறார், இந்த நிலையில் இணையதளத்தில் அருண் விஜய்யின் புதிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் அருண்விஜய் தாடி மீசை என அனைத்தையும் எடுத்து விட்டு புதிய ஹாஸ்டலில் கலக்கலான செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் அருண்விஜய் என கூறுகிறார்கள்.

Leave a Comment