நடிகர் அருண் விஜய் தடம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பாகுபலி நடிகர் பிரபாஸின் சாஹோ படத்தில் நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் விஜய் ஆண்டனியுடன் அக்னி சிறகுகள் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் விவேக் இயக்கத்தில் boxer திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது இந்த பூஜையில் நடிகர் அருண் விஜய்யும் கலந்துகொண்டார், இவரின் கெட்டப் அனைவரையும் கவர்ந்து விட்டது.

ஏனென்றால் boxer திரைப்படத்தில் அருண் விஜய் ஒரு குத்துச்சண்டை வீரராக நடிக்க இருக்கிறார் அதற்காக பயிற்சியும் எடுத்துள்ளார், மேலும் தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துள்ளார், இந்த நிலையில் உடல் முழுவதும் டாட்டூ போட்டுக் கொண்டு மண்டையில் கொண்டையுடன் பட பூஜையில் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

