ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டும் அருண்விஜய். புகைப்படத்தை பார்த்து மிரளும் கோலிவுட் சினிமா.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக வந்தவர்கள் சினிமாவில் நிலைக்க முடியவில்லை, இதற்கு உதாரணமாக பலரைக் கூறலாம் அதேபோல் வாரிசு நடிகராக வந்து தோல்வி பெற்று பின்பு மீண்டு வந்தவர்கள் குறைவுதான், இதற்கு உதாரணமாக விஜய கூட கூறலாம், அதன் பிறகு தற்பொழுது அருண் விஜய்யும் மக்களுக்கு பிடித்த நடிகராக மாறி வருகிறார்.

அருண் விஜய் சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார், இவரின் திரைப்படம் அனைவரும் ரசிக்கும்படி அமைந்து வருகிறது, அருண் விஜய் முன்பு இருந்த காலகட்டத்தில் தொடர் தோல்வியை கொடுத்தார் ஆனால் சமீபகாலமாக தொடர் வெற்றியை கொடுத்து வருகிறார்.

இந்த வெற்றிகள் அனைத்தும் அவரின் வளர்ச்சிக்கு வழியாக அமைந்துள்ளது, அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய தடம் திரைப்படம் அருண் விஜய்யின் சினிமா கேரியரில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது, இந்த திரைப்படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.

தற்பொழுது அருண்விஜய் மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படம் இதுவரை சினிமா எடுக்காத கஜகஸ்தான் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி படக்குழு மிரட்டி வருகிறார்கள். அதேபோல் படப்பிடிப்பில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள் அனைத்தும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு பிரமிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் அருண்விஜய் உறைந்த பனியில் கம்பீரமாக மிரட்டல் போஸ் கொடுத்துள்ளார், இந்த புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மேலும் அருண் விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி அட்டகாசம் ஆகியோர்கள் நடித்து வருகிறார்கள்.

arun-vijay
arun-vijay

Leave a Comment