இமாலய வெற்றியை நோக்கி போகும் அருண் விஜயின் “யானை படம்” – இதுவரை அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

0
yaanai
yaanai

அருண் விஜய் அண்மைக்காலமாக ஆக்சன் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் குற்றம் 23, தடம் மாஃபியா ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அருண் விஜய் கையில்  அக்னி சிறகுகள், சினம், பாக்சர், பார்டர் மற்றும் பல படங்கள் கைவசம் இருக்கின்றன.

ஆனால் தற்பொழுது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ஜூலை 1ஆம் தேதி யானை திரைப்படம் வெளியானது. யானை படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து இருந்தனர்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக வசூலும் ஆரம்பத்தில் இருந்து நன்றாகவே அள்ளிக்கொண்டு வந்தது படம் வெளிவந்து பத்து நாட்களை தொட்டுவிட்ட நிலையில் சென்னை ஏரியாவில் மட்டும் சுமார் 1.26 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக யானை திரைப்படம் சுமார் 43.5 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.  ஜூலை ஒன்றாம் தேதி வெளியான யானை படத்தை எதிர்த்து டி ப்ளாக், ராக்கெட்ரி ஆகிய படங்கள் வெளிவந்தாலும் யானை படத்திற்கான வரவேற்பு மக்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.

படமும் அதை பூர்த்தி செய்ததால் அனைத்து இடங்களிலும் கல்லா கட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் யானை படக்குழு செம சந்தோஷத்தில் இருக்கிறது குறிப்பாக ஹரி மற்றும் அருண் விஜய் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.