நாம நினைப்பதை விட அஜித் சார் வேற லெவல்.. அக்கா கையால வாங்கி அவரே கொடுத்தார்.

விஜய் சார் ரொம்ப அமைதி எனக்கு பிடிக்கும் ஆனால் அவரைத் தாண்டி ரொம்ப ரொம்ப பிடித்தது என்றால் அது அஜித் சார் தான். டிமான்டி காலனி படம் ஷூட்டிங் முடிச்சிட்டு கல்யாண பத்திரிக்கை எடுத்துக்கொண்டு அஜித் சார் வீட்டிற்கு போனோம்.

வீட்டுக்குள்ள போகும் பொழுது அஜித் சார் டிமான்டி காலனி வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்று சொல்லி தான் வரவேற்றார். உட்கார்ந்து நிறைய பேசிக்கிட்டு இருந்தோம் கிச்சன் உள்ள இருந்து வேலை செய்ற அக்கா ஜூஸ் எடுத்துட்டு வந்தாங்க அதனை அஜித் சார் எழுந்து வாங்கி எங்கள் அனைவருக்கும் கொடுத்தார்.

நல்லா பண்றீங்க நல்லா வருவீங்க இப்படியே நடிங்க என ஒரு மணி நேரம் பேசினோம் எனக்கு அவர் நிறைய விஷயத்தில் இருந்து விலகுவதற்கு காரணம் அவர நிறைய பேருக்கு பிடிக்கும்னு தோணும், ரசிகர்களை வச்சிதான் நாம் வளர வேண்டும் என்று நினைப்போம் ஆனால் அஜித் சார் ரசிகர் பட்டாலமே வேண்டாம் என்ற முடிவு செய்த பிறகும் அதைவிட இரண்டு மடங்கு அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் நடிகர் அருள்நிதி.