வசூல் மழையில் அருள்நிதியின் “டி பிளாக்” படம் – இதுவரை மட்டும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்யாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் அருள் நிதி குறிப்பாக அவருக்கு வரும் பெரும்பாலான கதைகள் திரில்லர் மற்றும் பேய் கதைகளாக வருவதாக கூறப்படுகிறது அதில் தனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடித்த டிமான்டி காலனி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அந்த படத்திற்கு பிறகு நடிகர் அருள்நிதி நடித்த திரில்லர் படம் தான் டி பிளாக். இந்தப் படத்தை  youtube எருமைச்சாணி விஜயகுமார் இயக்கி உள்ளார் இது அவரின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்நிதிவுடன் இணைந்து மிஸ்ரா, சரண் தீப், கரு பழனியப்பன் குமார், ரியாஸ் கான், ரமேஷ் கண்ணா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து அசத்தி உள்ளனர். டி பிளாக் திரைப்படம் பர்ஸ்ட் ஆஃப் முழுக்க முழுக்க காமெடியாக இருந்தாலும் பயங்கரமாக.

இருப்பதால் ரசிகர்களையும் தாண்டி மக்களை வெகுவாக  டி. பிளாக் படம் இழுத்துள்ளது.  இந்த படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் வசூலும் ஓரளவு நன்றாகவே அள்ளி வருகிறது. அந்த வகையில் டி ப்ளாக் திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே சுமார் 5 கோடி.

வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளும் என கூறப்படுகிறது நீண்ட இடைவெளிக்கு பிறகு அருள்நிதியின் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இதனால் அவரும் படக்குழுவும் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

Leave a Comment